உ.பி.யில் ராணுவ பயிற்சியின்போது விபத்து - 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

ஜான்சி: உத்தரப் பிரதேசத்தில் ராணுவ டேங்கரைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பயிற்சியின்போது பேரல் வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி அருகே உள்ளது பாபினோ ராணுவ பயிற்சி தளம். இந்த பயிற்சி தளத்தின் வருடாந்திர பயிற்சி நேற்று நடைபெற்றது. அப்போது, T-90 டேங்க் ஒன்றின் பேரல் திடீரென வெடித்துள்ளது. இதில், டேங்கின் மீது இருந்த ராணுவ வீரர்கள் மூவரில் ராணுவ கமாண்டர் மற்றும் சுடுபவர் என இருவர் பலத்த தீ காயமடைந்து உயிரிழந்தனர். இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காயமடைந்த ஓட்டுநர், பாபினோ ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ராணுவம், இந்த விபத்து குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ராணுவம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in