கர்நாடகாவில் பாரம்பரிய மதரஸாவில் அத்துமீறி துர்கா பூஜை கொண்டாடிய கும்பல்

மதரஸாவில் நுழைந்த கும்பல்
மதரஸாவில் நுழைந்த கும்பல்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் தசரா ஊர்வலத்தின் போது பாரம்பரிய மதரஸாவில் நுழைந்து இந்துக்கள் சிலர் பூஜை நடத்தியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் புதன் கிழமை இரவு தசரா ஊர்வலம் நடந்துள்ளது.

அப்போது வழியில் இருந்த பாரம்பரிய மதரஸாவுக்குள் ஊர்வலம் சென்ற சிலர் நுழைந்தனர். கட்டிடத்தின் ஒரு பகுதியில் அவர்கள் பூஜை நடத்தினர். அங்கே ஜெய் ஸ்ரீ ராம், இந்து தர்மம் வாழ்க போன்ற கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 9 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமைக்குள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று முஸ்லிம் அமைப்புகள் எச்சரித்திருந்த நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1460ல் கட்டப்பட்ட மஹமூத் கவான் மதரஸாவானது இந்திய தொல்லியல் ஆய்வு அறிக்கையின் படி பாரம்பரிய மையமாக அறியப்படுகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் பட்டியலிலும் இந்த மதரஸா இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில், மதரஸாவின் பூட்டை உடைத்த கும்பல் உள்ளே சென்றுள்ளது. மதரஸாவின் படிகளில் நின்று ஜெய் ஸ்ரீ ராம், இந்து தர்மம் வாழ்க கோஷங்களை அவர்கள் எழுப்பியுள்ளனர். பின்னர் கட்டிடத்தின் ஒரு ஓரத்தில் பூஜைகள் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைக்குள் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே கைது செய்யப்படவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று பிடார் மாவட்ட முஸ்லிம் அமைப்புகள் எச்சரித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in