தெற்கு ஆசிய செயற்கைக்கோள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு

தெற்கு ஆசிய செயற்கைக்கோள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு
Updated on
1 min read

சார்க் உறுப்பு நாடுகள் பயன்பெறும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தெற்கு ஆசிய செயற்கைக்கோள் 2017, மார்ச்சில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் நேற்று தெரிவித்தார்.

இந்த செயற்கைக்கோள் வரும் டிசம்பரில் விண்ணில் ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு இடையே நிருபர்களைச் சந்தித்த இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார், ‘‘சார்க் செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்த திட்டத்தில் இருந்து பாகிஸ்தான் விலகிக் கொண் டிருப்பதால், இனி தெற்கு ஆசியா செயற்கைக்கோள் என்ற பெயரில் அழைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in