

இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் டாக்டர் லாம் டோர்ஜி. திபெத் எல்லையில், ஓம்தாங் என்ற இடத்தில் இவர் மெட்ராஸ் படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரை சந்தித்தார். அவர் தமிழர் என அறிந்ததும், டாக்டர் லாம் டோர்ஜி தமிழில் பேசினார். இந்த வீடியோ வைரலானது.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள அருணாச்சலப் பிரதேச முதல்வர் பேமா காண்டு, ‘‘டாக்டர் லாம் டோர்ஜி தமிழகத்தில் மருத்துவம் பயின்றார். இவர் மெட்ராஸ் படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரருடன் சரளமாக தமிழில் பேசுவது அந்த வீரருக்கு ஆச்சர்யத்தை அளித்தது. தேசிய ஒற்றுமைக்கு அருமையான உதாரணம். நமது நாட்டின் மொழி பன்முகத்தைன்மையை எண்ணி நாம் பெருமை அடைகிறோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் ஏராளமானோர் பாராட்டி கருத்து தெரி வித்துள்ளனர். ‘இதுதான் இந்தியாவின் பலம்’ என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.