

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத் துக்கு 5 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களால் தமிழகத்தை விட வெளி மாநிலத்தவரே அதிக பலனடையும் வாய்ப்புள்ளது.
நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா சமர்ப்பித்த தனது முதல் பட்ஜெட்டில் 7 வகையான 58 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்துக்கு 10 சதவீதத்துக்கும் குறைவாக, வெறும் 5 ரயில்கள் மட்டும் இடம் பெற்றுள்ளன.
5 பிரிமியம் ரயில்களில் 2 தமிழகத்திற்கு அறிவிக்கப்பட் டுள்ளது. இவற்றில் ஒன்று ஜெய்பூரில் இருந்து மதுரைக்கும், மற்றொன்று ஷாலிமாரில் (மேற்கு வங்கத்தின் ஹவுரா) இருந்து சென்னைக்கும் இயக்கப்படும். 5 மாதங்களுக்கு முன் சமர்ப்பிக் கப்பட்ட கடந்த ஆட்சியின் இடைக்கால பட்ஜெட்டில் இந்த வகை ரயில்கள் அறிமுகம் செய்யப் பட்டன. இந்த ரயில்களின் கட்டணம், விமானக் கட்டணங்களைப் போல முன்பதிவு நாளுக்கு ஏற்றவாறு இருக்கும். (கடைசி நாளில் முன்பதிவு செய்வோருக்கு அதிகபட்ச கட்டணம்). இந்த ரயில்கள், பயணிகளின் தேவைக்கு ஏற்ப விடுமுறை மற்றும் பண்டிகை நாள்களில் மட்டும் இயக்கப்படும்.
பிரிமியம் ரயில்களை தொடர்ந்து, எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டு தமிழகத்துக்கு அறிவிக்கப் பட்டுள்ளன. அதில் ஒன்று, குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து வாசை வழியாக சென்னைக்கு வாரம் இருமுறை இயக்கப்படும்.
மற்றொரு எக்ஸ்பிரஸ், விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வாரம் ஒருமுறை இயக்கப்படும். விசாகப்பட்டினத் தில் இருந்து விடப்படும் இரண்டா வது ரயில் இது. ஆந்திர வாழ் தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கை எனக் கூறப்படுகிறது.
ஐந்தாவதாக, புறநகர் ரயில்களில் தமிழகத்துக்கு ஒரு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் (யஷ்வந்த்பூர்) இருந்து ஓசூருக்கு வாரத்தின் 6 நாட்களுக்கு இந்த ரயில் சென்று வரும். இது கர்நாடக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. அதை அம்மாநிலத்தைச் சேர்ந்த சதானந்த கவுடா நிறைவேற்றி உள்ளார்.
இந்த 5 புதிய ரயில்களும் தமிழ கத்துடன் வெளி மாநிலங்களை இணைக்கும் வகையிலேயே அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே வெளி மாநிலத்தவருக்கே அதிக பலன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மேலும் புதிதாக அறிவிக்கப் பட்டுள்ள ஜன்சாதரன் ரயில்கள் ஐந்தில் ஒன்று கூட தமிழகத் திற்கு இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.