

பிரதமர் நரேந்திர மோடியின் 97 வயது தாயார் காந்திநகரில் தன் கிராமத்தில் உள்ள வங்கிக்கிளைக்கு வந்து ரூ.500 நோட்டுகளை மாற்றிச் சென்றார்.
ரைசான் கிராமத்தில் உள்ள ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கிக்கு உறவினர்களுடன் வந்தார் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி, இவர் சக்கர நாற்காலிவயப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உறவினர்களுடன் வந்த ஹீராபென் மோடி படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து தனது பெருவிரல் ரேகையைப் பதிவு செய்து ரூ.4,500 மாற்றம் செய்து கொண்டார்.
புதிய ரூ.2000 தாள்களை பெற்ற ஹீராபென் மோடி அதனை செய்தியாளர்களிடம் காண்பித்தார். ஹீராபென் மோடி, பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடியுடன் ரைசான் கிராமத்தில் வசித்து வருகிறார்.
செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் மோடி வந்து தனது 66-வது பிறந்தநாளை முன்னிட்டு தாயாரிடம் ஆசி பெற்றுச் சென்றது குறிப்பிடத்தக்கது.