மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் வேண்டும்; கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
Updated on
1 min read

நாக்பூர்: மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

தசரா விழாவை ஒட்டி நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடந்த விழாவில் பேசிய மோகன் பாகவத், "இந்தியாவின் தற்போதைய தேவை மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டமும் மதம் சார்ந்த சமமற்ற நிலையைத் தடுத்து கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதுமே ஆகும். இவை இரண்டும் அசட்டை செய்யாமல் உடனே கவனிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மதம் சார்ந்து மக்கள் தொகையில் சமமற்ற நிலை உருவாகினால் அது தெற்கு சூடான், கொசோவோ நாடுகளில் ஏற்பட்ட நிலையை உருவாக்கும்.

மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப வளங்களும் தேவை. வளங்களைப் பெருக்கும் நடவடிக்கை எடுக்காமல் மக்கள் தொகை அதிகரிப்பதை அனுமதித்தால் அது சுமையாக மட்டுமே உருவாகும். ஆனால் அதே வேளையில் மக்கள் தொகை மிகப்பெரிய சொத்தாகவும் கருதப்படுகிறது. மக்கள் தொகை கொள்கையை வகுத்தால் தான் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு பூகோல ரீதியாகவும் எல்லைப் பிரச்சினைகளை உருவாக்கும். இவைதவிர கட்டாய மதமாற்றமும், ஊடுருவலும் பெரும் பிரச்சினையாக இருக்கிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in