Published : 09 Jul 2014 10:08 AM
Last Updated : 09 Jul 2014 10:08 AM

தனியாருக்கு ஆதரவாக செயல்படும் பாஜக அரசு: காங்கிரஸ் தாக்கு

ரயில்வே துறையை தனியார் மயமாக்க முயற்சிப்பதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பின்பற்றி வருகிறது என்று காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சருமான அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: “முந்தைய காங்கிரஸ் தலைமை யிலான அரசு பின்பற்றிய சோஷலிச பாதையிலிருந்து பாஜக கூட்டணி அரசு விலகிச் செல்கிறது. முதலீட்டாளர்களின் நலனுக்கு ஏற்ப இந்த அரசு செயல்படுகிறது. தனியார்மயத்தை ஊக்குவிக் கிறது.

அரசு தனியார் பங்களிப்புடன் கூடிய திட்டங்களுக்கோ, தனியார்மயத்துக்கோ நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால், அதிக வருமானம் தரக்கூடிய ரயில்வே சரக்கு சேவையை தனியார் முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையைத் தான் எதிர்க்கிறோம்.

அதேபோன்று அந்நிய நேரடி முதலீட்டையும் நாங்கள் எதிர்க்க வில்லை. ஆனால், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற் கான முதலீட்டை திரட்ட பொதுத் துறை நிறுவனங்களிலேயே போதுமான நிதி ஆதாரம் இருக்கும் போது, அந்நிய நேரடி முதலீட்டின் அவசியம் என்ன என்றுதான் கேட் கிறோம். இந்த ரயில்வே பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றம் அளித் துள்ளது. தொலைநோக்குத் திட்டங்களின்றி இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார் அதிர் ரஞ்சன் சவுத்ரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x