இவிஎம் வழக்கில் மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம்

இவிஎம் வழக்கில் மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம்

Published on

புதுடெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் குறைகள் இருப்பதாகவும் அதை களைய உத்தரவிட கோரியும் ம.பி.யை சேர்ந்தஜன் விகாஸ் கட்சி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், அபே எஸ்ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘விளம்பரம் தேடிக் கொள்வதற்காக இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே,மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இதுபோன்ற மனுக்கள் தடுக்கப்பட வேண்டும். மேலும் மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படுகிறது’’ என்று உத்தரவிட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in