

பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக சமாஜ் வாதி கட்சி எம்பி அமர்சிங் மீதும் மற்றொரு நபர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச பாஜக செய்தித்தொடர்பாளர் ஐ.பி.சிங் அளித்த புகாரின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66 வது பிரிவின் கீழ் சிட்டி கோட்வாலி பகுதி போலீஸ் நிலையத்தில் இவ்வழக்கு (முதல் தகவல்அறிக்கை) பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவதூறாக பேசும்போது அதை அமர்சிங் ரசித்தபடி புன்னகைப்பது போன்ற வீடியோக்கள் சமூகவலைத்தளங் களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து அமர்சிங்கை நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர், ‘‘டெல்லியில் உள்ள சாணக்கியாபுரி பகுதியில் ஒரு ஓட்டலுக்கு வெளியே கடந்த 8-ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. அந்த ஓட்டலுக்கு வெளியே நான் நின்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என்னுடன் செல்பி எடுத்த படி பிரதமரை அவதூறாக பேசினார். அந்த வீடியோ மறுநாள் சமூக வலைத்தளங்களில் பரவி யது. இது குறித்து போலீஸாரிடம் நான் ஏற்கெனவே புகார் அளித் துள்ளேன். அதன் அடிப்படையில் அந்த அடையாளம் தெரியாத நபர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பாஜக தலைவர் வழக்கு பதிவு செய்வதற்கு எந்த அவசியமும் இல்லை’’ என்றார்.