

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (எஸ்பிஐ) நேற்று ஒரே நாளில் ரூ.53,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்பிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தற்போதைய நிலவரப்படி 14 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் புழங்குகிறது. அதாவது மொத்த பொருளாதாரத்தில் 86 சதவீதம் கறுப்புப் பணமே. இதில் நேற்றுவரை 3.7 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பியுள்ளது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்தோ, டெபாசிட் செய்தோ மாற்றிக் கொள்ள முடியும்’’ என்றார்.