Last Updated : 29 Nov, 2016 04:06 PM

 

Published : 29 Nov 2016 04:06 PM
Last Updated : 29 Nov 2016 04:06 PM

வைரஸ் காய்ச்சல் பாதிப்பு: சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

உடல் நலக்குறைவு காரணமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார்.

‘கிருமி தொற்றினால் ஏற்பட்ட வைரஸ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள சோனியா காந்தி, 2 நாட்களுக்குள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள் வார். அவரின் உடல் நிலை குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை’ என, காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோனியா, கடுமையான காய்ச்சலால் பாதிக் கப்பட்டிருப்பதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவக் கண் காணிப்பில் இருக்க வேண்டு மென மருத்துவர்கள் அறிவுறுத்தி யிருப்பதாகவும், டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 3 மாதங்களில் 2-வது முறையாக சோனியா சிகிச்சைக் காக மருத்துவமனையில் சேர்ந் திருப்பது குறிப்பிடத்தக்கது. 69 வயதான சோனியா காந்தி, கடந்த ஆகஸ்ட் மாதம், வாரணாசியில் பேரணி ஒன்றில் பங்கேற்ற போது, திடீரென உடல்நலம் பாதிக் கப்பட்டு நிகழ்ச்சியை பாதியில் ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார்.

அப்போது காய்ச்சல், நீர் சத்துக் குறைவு மற்றும் தோள் பகுதியில் வலி காரணமாக இதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சோனியாவுக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன்பிறகு வீடு திரும்பி ஓய்வில் இருந்த சோனியா, தனது மகள் பிரியங்கா மற்றும் பேரக் குழந்தைகளுடன் சிம்லாவில் உள்ள ஓபராய் குழுமத்தின் சொகுசு ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்ததாக வும், சராப்ரா பகுதியில் பிரியங்கா சார்பில் கட்டப்பட்டு வரும் பங்களா வில், நாள் முழுவதும் தங்கியிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

சிம்லா பயணத்தை முடித்து விட்டு கடந்த வார இறுதியில் டெல்லி திரும்பிய சோனியா காந்தி, மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x