

நம் நாட்டில் தேசிய கீதம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக ஷ்யாம் நாராயண் சவுக்ஸி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனு வில், “நம் நாட்டில், அனுமதிக்கப் படாத பல்வேறு சூழ்நிலைகளில் தேசிய கீதம் பாடப்படுகிறது. இதை தடுக்க வேண்டும்.
வர்த்தக நோக்கத்தில் நிதி ஆதாயம் பெறுவதற்காக இதை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. தேசிய கீதம் பாடத் தொடங்கினால் அது முழுமையாக பாடப்படும் வரை எவ்வித இடையூறையும் அனுமதிக்கக் கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் தேசிய கீதத்தை சுருக்கமாக பாட அனுமதிக்கக் கூடாது” என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசா ரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “எந்தெந்த செயல்களை, தேசிய கீதத்தை அவமரியாதை செய்வ தாக அல்லது தவறாக பயன் படுத்துவதாக கருதலாம்” என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி னர். வழக்கை நவம்பர் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.