Last Updated : 19 Jul, 2014 11:10 AM

 

Published : 19 Jul 2014 11:10 AM
Last Updated : 19 Jul 2014 11:10 AM

2 புதிய செயற்கைக்கோள்களை ஏவுகிறது இஸ்ரோ: அதிக நிதி ஒதுக்கீட்டால் உத்வேகம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (இஸ்ரோ) நடப்பு நிதியாண்டில் ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதையடுத்து, ஜிசாட்-15, ஜிசாட்-16 ஆகிய இரு செயற்கைக்கோள்க‌ளையும் விண்ணில் ஏவும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.

ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

இது தொடர்பாக மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள அறிக்கை:

பட்ஜெட்டில் மத்திய அரசு விண்வெளி துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இதில் ரூ. 3545.63 கோடி நிதி விண்வெளித் தொழில் நுட்பத்திற்காகவும், இன்சாட் செயற்கைக்கோள் திட்டத்திற்கு ரூ. 1412.98 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நடப்பு ஆண்டு அதிக விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்த இஸ்ரோவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஜிசாட்-15 செயற்கைக்கோள் ஏவப்பட இருக்கிறது. இந்த செயற் கைக்கோள் 24 கியூ-பேண்ட், 24 டிரான்ஸ்பாண்டர்களையும், 'ககன்' என்ற சாதனத்தையும் கொண்டுசெல்லும். இதன் மூலம் தற்போது நடைமுறையில் உள்ள 'டிடிஎச்' மற்றும் 'விசாட்' சேவைகளின் திறன் அதிகரிக்கும்.

2015-ம் ஆண்டின் மத்தியில் ஜிசாட்-16 செயற்கைக்கோள் ஏவப்பட இருக்கிறது. அது, சி-பேண்ட்,கியூ-பேண்ட்,48 டிரான்ஸ்பாண்டர்களை விண் ணுக்கு எடுத்து செல்லும்.

இவை தற்போது செயல் பட்டு கொண்டிருக்கும் இன்சாட்3, இன்சாட்-4 பி ஆகிய செயற் கைக்கோள்களுக்கு பதிலாக சேவை அளிக்க தொடங்கும்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிசாட்-15 செயற்கைக் கோளானது ரூ 859 கோடி செல வில் உருவாகிறது. அதேபோல ஜிசாட்-16 செயற்கைக்கோள் ரூ.865 கோடி செலவில் உருவாக்கப்பட உள்ளது. இதே போல சந்திராயன் 1 மற்றும் 2 திட்டத்திற்காக மத்திய அரசு ரூ. 60 கோடி ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது,

“ஜிசாட்-15, ஜிசாட்-16 ஆகிய இரு செயற்கைக்கோள்களை யும் இஸ்ரோ விண்ணுக்கு ஏவுவதன் மூலம் இந்தியா தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறையில் அபரிமிதமான வளர்ச்சி அடை யும். டி.டி.எச்.சேவை, விசாட் உள்ளிட்ட சேவைகளில் குறிப் பிடத் தகுந்த முன்னேற்றத்தை அடையலாம்.

மேலும் வணிக ரீதியாக இஸ்ரோ அமைப்பால் நாட்டிற்கு பல்வேறு நிதி ஆதாரங்களை உருவாக்கவும் முடியும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x