

உடல் உறுப்பு தானத்தை எளிமைப் படுத்தும் வகையில் உரிய விதிகள், கட்டுப்பாடுகள் மற்றும் மரபுகளை இயற்ற மத்திய அரசு முடிவு செய் திருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித் துள்ளார்.
டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சுகா தாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பங்கேற்றார். அவருடன் இணைந்து மத்திய அரசு மருத்துவ மனை ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்களும் உடல் உறுப்பு தான உறுதிமொழி ஏற்றனர்.
இதைத் தொடர்ந்து நட்டா பேசி யதாவது: நாட்டின் தேவைக்கேற்ப தற்போது உறுப்புகள் தானம் செய்யப்படுவதில்லை. உடல் உறுப்புகள் தேசத்தின் சொத்து. ஒருவர் கூட அதை வீணாக்கக் கூடாது. உறுப்புகளை தானம் செய் வது என்பது பிறருக்கு அளிக்கும் அன்பளிப்பாகும். பொதுநல, சமத் துவ மற்றும் தார்மீக கடமையாகும். உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் முடிந்த வாழ்க்கையை, வேறொருவர் மூலம் புதுப்பித்துக் கொள்ள முடியும். எனவே உடல் உறுப்பு தானம் தேசிய இயக்க மாக மாற வேண்டும். மரணத் தருவாயிலும், மனிதத்தை போற்றும் மிகப் பெரிய நாடாக உலகில் இந்தியா உருவாக வேண்டும்.
உறுப்பு தானத்தை எளிமைப் படுத்துவதற்கான விதிகள், கட்டுப்பாடுகள் மற்றும் மரபுகளை இயற்றும் பணிகளில் சுகாதார அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. ஆண்டுதோறும் நமது நாட்டில் 1.5 லட்சம் மூளைச்சாவுகள் ஏற்படு கின்றன. அத்தனை பேரிடம் இருந் தும் உறுப்புகளை தானமாக பெறு வதன் மூலம் சில லட்சம் நோயாளி களை காப்பாற்ற முடியும். உறுப்பு தான பிரச்சாரத்தை முன் னெடுத்து செல்லும் வகையில் தேசிய உறுப்பு மாற்று திட்டத்தை யும் சுகாதார அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.