புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவை தொடங்கி வைத்தார் திரவுபதி முர்மு

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா நேற்று உற்சாகத்துடன் தொடங்கியது. நவராத்திரி கொண்டாட்டத்தை யொட்டி மைசூரு அரண்மனையில் அரச தர்பார் நிகழ்ச்சிக்கு வருகிறார் மைசூரு மகாராஜா யதுவீர கிருஷ்ணதத்த சாம்ராஜ உடையார்.  படம்: பிடிஐ
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா நேற்று உற்சாகத்துடன் தொடங்கியது. நவராத்திரி கொண்டாட்டத்தை யொட்டி மைசூரு அரண்மனையில் அரச தர்பார் நிகழ்ச்சிக்கு வருகிறார் மைசூரு மகாராஜா யதுவீர கிருஷ்ணதத்த சாம்ராஜ உடையார். படம்: பிடிஐ
Updated on
1 min read

பெங்களூரு: உலகப் புகழ்ப்பெற்ற மைசூரு தசரா திருவிழாவை குடியரசுச் தலைவர் திரவுபதி முர்மு நேற்று தொடங்கி வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் பங்கேற்பதால் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிபி 1610-ம் ஆண்டில் இருந்து மைசூருவை ஆண்ட உடையார் மன்னர்கள் போரில் வென்றதை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையின் போது தசரா விழாவை கொண்டாட தொடங்கினர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கர்நாடக அரசின் சார்பில் ஆண்டுதோறும் 10 நாட்கள் தசரா திருவிழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக க‌ரோனா தொற்றின் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட்ட தசரா விழா, இந்த ஆண்டு ஆடம்பரமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் 412வது மைசூரு தசரா விழாவை குடியரசுச் தலைவர் திரவுபதி முர்மு நேற்று காலை 10 மணியளவில் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தசராவின் இறுதிநாளான அக். 5ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க ஜம்போ சவாரியை (யானை ஊர்வலம்) முதல்வர் பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார். இந்த ஊர்வலத்தின்போது 750 கிலோ தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை வைக்கப்பட்டு மைசூருவில் பிரதான சாலைகளில் ஊர்வலமாக கொண்டுவரப்படும். இதைத் தொடர்ந்து நடைபெறு ம் தீப்பந்த விழாவை ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in