Published : 14 Nov 2016 10:13 AM
Last Updated : 14 Nov 2016 10:13 AM

சிகிச்சை கட்டணமாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாங்க மறுப்பு: ரூ.40,000-க்கு சில்லறையை கொட்டிய குடும்பம்

அதிர்ச்சியில் கொல்கத்தா மருத்துவமனை பணியாளர்கள்

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா வின் நியூஅலிபோர் பகுதியில் பிபி பொத்தர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது. தாஸ்நகரைச் சேர்ந்த சுகந்தா சாவ்லி என்பவர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு இம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். கடந்த புதன் கிழமை சிகிச்சை முடிந்தது.

மறுநாள் டிஸ்சார்ஜ் செய்ய ரூ.40,000 செலுத்துமாறு மருத்துவ மனைப் பணியாளர்கள் தெரிவித் தனர். சுகந்தாவின் குடும்பத்தினர் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வைத்திருந்தனர்.

முந்தைய நாள் இரவு, 500, 1000 ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், வேறு பணம் இல்லாததால் அவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு, சுகந்தா வின் குடும்பத்தினர் கேட்டதை மருத்துவமனை ஏற்கவில்லை.

டெபிட், கிரெடிட் கார்டு போன்ற வையும் சுகந்தாவின் குடும்பத்தா ரிடம் இல்லை. வங்கிக் காசோலை பெற்றுக்கொள்ளுங்கள் என, அவர்கள் கேட்டதற்கும், மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக் கொள்ளவில்லை.

போராடிப் பார்த்த சுகந்தாவின் குடும்பத்தார், வாட்ஸ் அப் குழுக் கள் மூலம் நண்பர்கள், உறவினர் கள் மற்றும் பல தரப்பிலும் நிலைமையை எடுத்துக்கூறி சில்லறை நாணயங்களைத் தந்து உதவுமாறு கோரிக்கை விடுத்தனர். அடுத்த சில மணி நேரங்களில் மடமடவென அவர்களிடம் சில்லறை நாணயங்கள் குவியத் தொடங்கின.

அதிகாலை 3 மணியளவில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான சில்லறை நாணயங்கள் எண்ணி முடிக்கப்பட்டு, தனித்தனி பைகளில் மூட்டையாக கட்டி தயார் நிலையில் வைக்கப்பட்டன.

வியாழன் பகல் 11 மணிக் கெல்லாம், மருத்துவமனைக்கு வந்து சில்லறை மூட்டையை சுகந்தாவின் குடும்பத்தார் காட்டிய போது, காசாளர் அதிர்ந்துவிட்டார். அதெல்லாம் ஒப்புக்கொள்ள மாட்டோம் என, காசாளர் முதலில் முரண்டு பிடித்துள்ளார்.

‘விடிய விடிய அலைந்து திரிந்து, சில்லறையை திரட்டியிருக் கிறோம். சட்டப்படி இந்த காசு களைச் செல்லாது எனக் கூற முடியாது. இதையும் ஏற்காமல் பிடிவாதம் பிடித்தால், போலீஸ் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை’ என சுகந்தாவின் உறவினர்கள் மிரட்டியதை அடுத்து, மருத்துவமனை நிர்வாகம் பணிந்துள்ளது.

பின்னர், 6 பணியாளர்களை வைத்து, சில்லறை மூட்டையை பிரித்து எண்ணி முடித்து, திட்டமிட்ட படி வியாழக்கிழமை மாலை 3 மணிக்கெல்லாம் சுகந்தாவை டிஸ் சார்ஜ் செய்து அனுப்பி வைத்தது மருத்துவமனை நிர்வாகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x