21 திரிணமூல் எம்எல்ஏக்களுடன் தொடர்பு: பாஜக பிரமுகர் மிதுன் சக்கரவர்த்தி பேச்சு

பாஜகவைச் சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி.
பாஜகவைச் சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி.
Updated on
1 min read

கொல்கத்தா: பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவரும், பாலிவுட் நடிகருமான மிதுன் சக்கரவர்த்தி பத்திரிகையாளர் சந்திப்பில் நேற்று கூறியதாவது.

மேற்குவங்கத்தில் கடந்த ஜூலை மாதத்தில் தெரிவித்தது போல எந்த மாற்றமுமின்றி ஆளும் திரிணமூல் கங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ.க்களில் 38 பேர் எதிர்க்கட்சிகளுடன் தொடர்பில் இருக்கின்றனர். அதில் 21 எம்எல்ஏ.க்கள் நேரடியாக பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். சிறிது காலம் பொறுமையுடன் இருங்கள். அதன் பிறகு எல்லாம் வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில், "திரிணமூல் காங்கிரஸ் கட்சி அதன் ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்யாது. 2024-ம் ஆண்டில் அந்த கட்சி ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in