ரயில்வே இ-சேவை, டெபிட் கார்டு சேவைக் கட்டணம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

ரயில்வே இ-சேவை, டெபிட் கார்டு  சேவைக் கட்டணம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
Updated on
1 min read

பணமதிப்பு நீக்க நடவடிக் கைக்கு பிறகு மின்னணு பரிவர்த் தனைகளை பரவலாக்கவும், ஊக்கு விக்கவும் மத்திய அரசு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. அதனையொட்டி டிசம்பர் 31-ம் தேதிவரை டெபிட் கார்டு பயன் படுத்தினால் சேவை கட்டணம் ரத்து செய்யப்படும் என அறிவித்துள் ளது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பொருளாதார விவகாரத் துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் இதனைத் தெரிவித்தார்.

டிசம்பர் 31-ம் தேதி வரை ஏடிஎம், ரயில்வே இ-டிக்கெட்டு களுக்கான சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான சேவைக் கட்டணம் வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதுபோல பணமற்ற வர்த்தக நடவடிக்கைகளை பரவலாக்கவும், ஊக்குவிக்கும் விதமாகவும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு டிசம்பர் 31-ம் தேதிவரை எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் அறிவித்தார்.

மின்னணு அடையாளம்

வாகனத் தயாரிப்பு நிறுவனங் கள் புதிதாக தயாரிக்கும் வாகனங் களில் மின்னணு அடையாள அமைப்பை உருவாக்க வேண் டும் என அரசு கேட்டுக் கொண் டுள்ளதாகவும் கூறினார். இதன் காரணமாக சுங்கச் சாவடி நடை முறைகள் எளிதாகும். இதன் மூலம் பணமற்ற பொருளாதாரத்தையும் ஊக்குவிக்க முடியும். இது தொடர் பாக போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத் துறை அமைச்சகம் அனைத்து வாகன தயாரிப்பு நிறு வனங்களுக்கும் அறிவுறுத்தியுள் ளது. குறிப்பாக ரேடியோ அலை வரிசை அடையாள (RFID) அமைப் புடன் புதிய வாகனங்களை தயாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.

செய்தியாளர்களின் கேள்வி

மக்கள் பண நெருக்கடியில் உள்ள நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ஏன் இது குறித்து பேசாமல் இருக்கிறார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சக்திகாந்த தாஸ், அரசின் சார்பாக யார் பேசுகிறார்கள் என் பது தேவையற்ற விஷயம். அரசின் சார்பாக நான் தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். நான் அரசின் சார்பாகவே பேசி வருகிறேன், தனிப்பட்ட முறையில் அல்ல, எனவே நான் பேசுகிறேனா, அல்லது வேறு யாராவது பேச வேண்டுமா என்ற கேள்வி தேவையற்றது என்றார்.

நிதிச் செயலர் அசோக் லவாசா அல்லது நிதிச்சேவைகள் செயலர் அஞ்சுலி சிப் தக்கல் ஆகிய இரு வரில் ஒருவர் கூட செய்தியாளர் களை சந்திக்கவில்லை. ரூபாய் நோட்டு நடவடிக்கைக்குப் பிறகு பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ்தான் அனைத்து அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in