Published : 07 Jul 2014 12:28 PM
Last Updated : 07 Jul 2014 12:28 PM

வனப் பொருள் கடத்தல் மாபியாக்களை அடையாளம் காட்டுகிறது ‘சைட்ஸ்’: இன்று முதல் ஜெனீவாவில் ஆலோசனை

உலகம் முழுவதும் சட்ட விரோத மாக நடக்கும் வன உயிரின பொருட் கள் தொழிலை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பது குறித்த சைட்ஸ் (Convention on International Trade in Endangered Species) ஆலோ சனைக் கூட்டம், இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை ஜெனீவா வில் நடக்கிறது.

இதில், இந்தியா உட்பட உலகம் முழுவதும் இருந்து 400-க்கும் மேற் பட்ட வன உயிரின ஆராய்ச்சியா ளர்கள் மற்றும் அந்த அமைப்பில் இணைந்துள்ள நாடுகளின் பிரதி நிதிகள் கலந்து கொள்கின்றனர். சைட்ஸில் மொத்தம் 180 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

புலி உடலில் இருந்து ஒயின்

கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வுள்ள முக்கிய அம்சங்கள் பின் வருமாறு:

புலிகள் கொலை செய்யப்படு வது குறித்து சைட்ஸ் அமைப்பு மிகவும் கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக சீனா, பாகிஸ்தான், தாய்லாந்து, இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் புலிகளின் உடல் பாகங்கள் சட்டவிரோதமாக விற் பனை செய்யப்படுவது அதிகரித்து இருக்கிறது. சில சட்டவிரோத நிறுவனங்கள் புலியின் உடல் பாகங்களை அரிசியுடன் சேர்த்து ஊற வைத்து புது ரக ஒயினை தயாரிக்கும் அதிர்ச்சி தகவலையும் சைட்ஸ் கண்டறிந்துள்ளது.

25 ஆயிரம் யானைகள் வேட்டை

ஆப்பிரிக்காவில் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு கோடி யானைகள் இருந்தன. ஆனால், இப்போது அங்கு ஐந்து லட்சம் யானைகள் மட்டுமே இருக்கின்றன. கடந்த 2013-ம் ஆண்டில் மட்டும் அங்கு 25 ஆயிரம் யானைகள் தந்தத்துக்காக கொல்லப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய மாபியாக்கள் பதுங்கியிருக்கும் எட்டு ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளை சைட்ஸ் அமைப்பு அடையாளம் கண் டுள்ளது. இதுகுறித்தும் கூட்டத் தில் விவாதிக்கப்பட இருக்கிறது.

காணாமல் போகும் காண்டாமிருகங்கள்

ஆசியா முழுவதுமே காண்டா மிருகங்களின் வேட்டையை தடுக்க முடியவில்லை என்று சைட்ஸ் கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, வியட்நாமில் மிக அதிக அளவு காண்டாமிருகம் வேட்டை நடந்துவரும் நிலையில் அந்நாட்டின் மாபியாக்கள் குறித்த விவரங்களை சைட்ஸ் கூட்டத்தில் அறிவிக்கவுள்ளனர். இவை தவிர இந்தியா மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் இருந்து செம்மரங்கள் அதிக அளவில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக சைட்ஸ் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் ஆசியாவில் 4000 டன் செம்மரக் கட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சைட்ஸ் அறிவித்துள்ளது.

நடவடிக்கை எடுக்காத உறுப்பு நாடுகள் சஸ்பெண்ட்

உலகம் முழுவதும் புலிகள், யானைகள், காண்டாமிருகங்கள், சுறாக்கள், திமிங்கிலங்கள், செம்மரங்கள், அழியும் நிலையிலுள்ள தடை செய்யப்பட்ட பட்டியலில் இருக்கும் மருத்துவத் தன்மை வாய்ந்த தாவரங்கள் என 35 ஆயிரம் இனங்களை பயன்படுத்த சைட்ஸ் மற்றும் சைட்ஸின் உறுப்பு நாடுகள் தடைவிதித்துள்ளன.

இக்கூட்டத்தில் ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் சட்டவிரோத வனப் பொருட்கள் தொழில் குறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படவுள்ளது. அதன்படி நடவடிக்கை எடுக்காத உறுப்பு நாடுகளை தற்காலிக நீக்கம் செய்யவும் சைட்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்திய வனக்குற்றங்களும் விவாதிக்கப்படும்

1976-ம் ஆண்டில் இருந்து சைட்ஸ் அமைப்பில் இந்தியா உறுப்பினராக இருக்கிறது. கூடுதல் தலைமை இயக்குநர் மற்றும் இயக்குநர் (வனத்துறை) - டெல்லி, வனக்குற்றங்கள் தடுப்புப் பிரிவு தென் மண்டல துணை இயக்குநர் - சென்னை, இந்திய வன உயிரின ஆராய்ச்சி நிலைய இயக்குநர் டேராடூன், உள்ளிட்டோர் சைட்ஸுக்கான இந்தியாவின் அதிகாரம் பெற்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

சைட்ஸ் கூட்டத்தில் இந்தியா கலந்து கொள்வது குறித்து 'தி இந்து'-விடம் பேசிய இந்திய வன உயிரின ஆராய்ச்சி நிலையத்தின் மூத்த விஞ்ஞானி கே.ரமேஷ், “சைட்ஸின் ஒவ்வொரு கூட்டத்திலும் இந்தியா தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறது. எங்கள் நிறுவனத்தின் இயக்குநர் ஜெர்மனி சென்றிருப்பதால் இந்தியாவின் சார்பில் வனத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். கூட்டத்தில் இந்தியாவில் நடக்கும் வனக்குற்றங்களும் விவாதிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x