காங்கிரஸ் தலைவர் தேர்தல்: போட்டியிட விரும்புவோருக்கு ராகுல் காந்தி அறிவுரை

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: போட்டியிட விரும்புவோருக்கு ராகுல் காந்தி அறிவுரை
Updated on
1 min read

எர்ணாகுளம்: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பும் மூத்த தலைவர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுலிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த ராகுல், ‘‘காங்கிரஸ் தலைவர் பதவி என்பது வரலாற்று சிறப்புமிக்க பதவி. இது இந்தியாவுக்கான குறிப்பிட்ட கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் பதவி. காங்கிரஸ் தலைவர் பதவி ஆலோசனை மிக்க கருத்துக்களை தெரிவிக்கும் பதவி. நல்ல கருத்துக்களை, நம்பிக்கைகளை தெரிவிக்கும் நபராகவும், இந்தியாவின் தொலைநோக்கு சிந்தனை உள்ளவராகவும் நீங்கள் இருக்கப் போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’’ என்றார்.

நடைபயணம் குறித்து பேட்டியளித்த ராகுல், ‘‘இந்த நடைபயணம் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களை உள்ளடக்கியது. நாட்டின் நிறுவன கட்டமைப்புகளை ஆக்கிரமித்துள்ள ஒரு இயந்திரத்துக்கு எதிராக நாங்கள் பேராடுகிறோம். அந்த இயந்திரம் மக்களுக்கு அழுத்தத்தை கொடுத்து அச்சுறுத்துகிறது. இதன் விளைவை நீங்கள் கோவாவில் பார்த்தீர்கள்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in