

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு டிசம்பர் 15-க்கு பிறகு எந்நேரமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உ.பி.யின் 403 தொகுதிகள் மற்றும் உத்தராகண்டின் 70 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 2012-ல் நடை பெற்றது. இதில் உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. முலாயம் சிங்கின் மகன் அகி லேஷ் சிங் யாதவ் முதல்வராக பதவியேற்றார்.
உத்தராகண்டில் காங்கிரஸ் கட்சியின் ஹரீஷ் ராவத் முதல்வராக உள்ளார். இவ்விரு மாநில பேரவைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 17-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
அதற்குள் அவ்விரு மாநிலங் களிலும் தேர்தல் நடத்த வேண்டி, தேர்தல் ஆணைய உத்தரவின் படி, உ.பி. மற்றும் உத்தராகண்ட் மாநில தேர்தல் அதிகாரிகள் விடு முறை நாட்களிலும் அதற்கான இறுதிகட்டப் பணிகளில் தீவிர மாக உள்ளனர். இப்பணிகள் டிசம்பர் 15-ம் தேதிக்குள் முடிவடை யும் நிலையில், அதன் பிறகு எந்நேரமும் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறும்போது, “வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த 15-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இதன் இறுதிப்பட்டியல் ஜனவரி 2-ம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களும் உ.பி., உத்தராகண்ட் தொகுதிகளில் சேர்க்கப்பட்டு, அதற்கானப் பயிற்சிகள் வீடியோ மூலமாக நடைபெற்று வருகின்றன. எனவே, டிசம்பர் 15-க்கு பிறகு சில தினங் களில் தேர்தல் அறிவிக்கப்படும். இத்துடன் பஞ்சாப், கோவா, மணிப் பூர் ஆகிய மாநிலங்களுக்கும் சேர்த்து தேர்தல் அறிவிப்பு வெளி யாகும்” என்று தெரிவித்தனர்.
117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப், 40 தொகுதிகளைக் கொண்ட கோவா, 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைய உள்ளது. பஞ்சாபில் பாரதிய ஜனதா ஆதரவுடன் சிரோமணி அகாலி தளமும், கோவாவில் பாஜகவும், மணிப்பூரில் காங்கிரஸும் தற்போது ஆட்சியில் உள்ளன.