

ஜம்மு சர்வதேச எல்லையில் இந்தியப் படை வீரர்களை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.புராவில் பிட்டல் அவுட் போஸ்ட் அருகேயிருந்து பாகிஸ்தானிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று காலை 11.15 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காரணமில்லாமல் அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் 192 பி.எஸ்.எஃப். படையைச் சேர்ந்த சஞ்சய் தார் என்ற வீரர் கொல்லப்பட்டார். மேலும் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைததோடு, கிராமத்தினர் சிலரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அப்பாவி மக்கள் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு இந்தியப் படையினர் எதிர் தாக்குதல் தொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் 3வது முறையாக ஒப்பந்தத்தை மீறி அத்துமீறல் செய்துள்ளது.