Last Updated : 06 Nov, 2016 12:50 PM

 

Published : 06 Nov 2016 12:50 PM
Last Updated : 06 Nov 2016 12:50 PM

எல்லை பிரச்சினையை பேசவில்லை: பொருளாதாரம், தீவிரவாத ஒழிப்பில் இணைந்து செயல்பட இந்தியா - சீனா ஒப்புதல்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் உடன்பாடு

அரசியல், பொருளாதாரம், பாது காப்பு, தீவிரவாத ஒழிப்பு போன்ற வற்றில் தொடர்ந்து இணைந்து செயல்பட இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

இந்தியாவின் அருணாச்சலப் பகுதியை சீனா சொந்தம் கொண் டாட தொடர்ந்து முயற்சிக்கிறது. காஷ்மீரின் லே பகுதியில் இந்திய அரசு கால்வாய் பணி களை மேற்கொண்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன படையினர் சமீபத்தில் ஊடுருவினர். அவர்களை இந்தோ திபெத் படையினர் தடுத்து திருப்பி அனுப்பினர். இருநாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை தொடர்ந்து நிலவி வருகிறது.

பதற்றமான சூழ்நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜீச்சி ஆகியோருக்கு இடையில் ஐதராபாத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தை நட்பாகவும், வெளிப்படையாகவும் மனப்பூர்வமாகவும் அமைந்தது என்று மத்திய அரசு நேற்று தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

இந்தியா சீனா இடையேயான நல்லுறவு, பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள், இரு நாட்டு நலன் குறித்து அஜித் தோவல் யாங் ஜீச்சி ஆகியோர் மிக விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை நட்புரீதியாகவும் வெளிப்படையாகவும் மனப்பூர்வ மாகவும் இருந்தது. இந்தப் பேச்சு வார்த்தையில், அரசியல், பொருளா தாரம், பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு உட்பட முக்கிய துறைகளில் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயலாற்ற இந்தியாவும், சீனாவும் ஒப்புக் கொண்டன.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராக சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல் இந்தியாவில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை தடை செய்யப்பட்ட தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா முறையிட்டு வருகிறது. அதற்கும் சீனா முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்தப் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததா என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x