

கடந்த 1988-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் நிகழ்ந்த மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக நேற்றைய கான்பூர் விபத்து கருதப்படுகிறது.
முந்தைய விபத்துகளின் விவரம் வருமாறு:
1988, ஜூலை 8:
பெங்களூர்-திருவனந்தபுரம் சென்ட்ரல் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயில், கேரளாவின் அஷ்டமுடி ஏரியில் விழுந்து, 107 பேர் பலி.
1988 ஏப்ரல் 18:
உத்தரப் பிரதேச மாநிலம் லலித்பூர் அருகே கர்நாடகா எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு 75-க்கும் அதிகமாவோர் பலி.
1995, ஆகஸ்ட் 20:
உத்தரப் பிரதேசத்தில் பிரோசாபாத் ரயில் நிலையத்துக்கு அருகே கலிந்தி எக்ஸ்பிரஸ் மீது, புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் மோதி, 400 பேர் உயிரிழப்பு.
1997, செப்டம்பர் 14:
மத்திய பிரதேச மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் அகமதாபாத்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டு ஆற்றில் விழுந்ததில், 81 பேர் பலி.
1998, நவம்பர் 26:
பஞ்சாபில் தடம்புரண்ட பிரான்டியர் மெயிலில் பெட்டிகள் மீது, ஜம்மு தாவி-சீல்டா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 212 பேர் பலி.
1999, ஆகஸ்ட் 2:
அசாமின் கைசால் பகுதியில், 2,500 பேர் பயணம செய்த 2 ரயில்கள் மோதி விபத்துக்கு உள்ளானதில், 290 பயணிகள் பலி.
2002, செப்டம்பர் 9:
ஹவுரா-டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், பிஹாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள தாவே நதியில் விழுந்ததில், 100 பேர் பலி.
2010, மே 28:
மேற்குவங்க மாநிலம் மேற்கு மிட்நாபூர் மாவட்டத்தில் ஞானேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் நக்ஸல் சதியால் தடம்புரண்டு 148 பேர் பலி.
2016, நவம்பர் 20:
இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் அருகே தடம் புரண்டு, 120 பேர் பலி.