ஆந்திரா, தெலங்கானாவில் என்ஐஏ நடத்திய சோதனைக்கு பிஎஃப்ஐ அமைப்பு கண்டனம்

ஆந்திரா, தெலங்கானாவில் என்ஐஏ நடத்திய சோதனைக்கு பிஎஃப்ஐ அமைப்பு கண்டனம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஆந்திரா, தெலங்கானாவில் என்ஐஏ நடத்திய சோதனைக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிஎஃப்ஐ தேசிய செயலாளர் நஸ்ருத்தீன் இளமரம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஜூலையில் தற்காப்பு கலை ஆசிரியர் அப்துல் காதரை தெலங்கானா போலீஸார் கைது செய்தனர். அவரோடு 2 அப்பாவி முஸ்லிம்களையும் பொய் வழக்கில் சிக்க வைத்தனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் தூண்டுதலின்பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.

ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த பிஎஃப்ஐ இயக்கத்தின் அப்பாவி உறுப்பினர்களை குறிவைக்க இந்த பொய் வழக்கை என்ஐஏ பயன்படுத்துகிறது. பிஹாரில் செய்தது போன்று இந்த வழக்கிலும் நிரபராதிகள் பொய் வழக்குகளில் கைது செய்யப்படுகின்றனர்.

என்ஐஏவின் சோதனை நாடகம், சிறுபான்மையினரின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இயக்கங்களை ஒடுக்கும் அதிகார துஷ்பிரயோகம் ஆகும். அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச மாட்டோம். நீதிக்கான எங்கள் குரல் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in