Published : 20 Sep 2022 04:53 AM
Last Updated : 20 Sep 2022 04:53 AM

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மீது புதிய வழக்கு

பெங்களூரு: கடந்த 2017ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத‌ ரூ.8.59 கோடி ரொக்கப்பணம், ஏராளமான சொத்து ஆவணங்கள், தங்க வைர நகைகள் சிக்கின‌. இதுதொடர்பாக, 2018ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, கடந்த ஜூலையில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இடைக்கால குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்நிலையில், செப்டம்பர் 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு டி.கே.சிவகுமாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.

அதன்படி டி.கே.சிவகுமார் நேற்று பிற்பகல் 12 மணிக்குடெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணைக்கு பிறகு டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தற்போது என் மீது புதிதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதுபற்றிய விவரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. வழக்கின் நகல் கோரி விண்ணப்பித்திருக்கிறேன். அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வேன்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x