

திருட்டு மற்றும் மனைவியின் சொத்துகளை அபகரித்ததாக கைது செய்யப்பட்டுள்ள, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மருமகனை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
ஷீலா தீட்சித்தின் மகள் லத்திகாவுக்கும் சையது முகம்மது இம்ரான் என்பவருக்கும் இடையே கடந்த 1996-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் கடந்த 10 மாதங்களாக இத்தம்பதியர் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலை யில் இம்ரானுக்கு எதிராக லத்திகா கடந்த ஜூனில் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தனது புகாரில், “டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் எனது தாயாரின் தோல்விக்குப் பிறகு, இம்ரான் என்னைக் கொடுமைப்படுத்த தொடங்கினார். நைனிடாலில் உள்ள எனக்குச் சொந்தமான நிலத்தின் ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றுவிட்டார். பிறகு டெல்லியில் உள்ள வீட்டில் இருந்து எனது நகைகள், விலை யுயர்ந்த பிற பொருட்கள் மற்றும் சில உடைமைகளை எடுத்துச் சென்றார். இம்ரானின் உறவுக்கார பெண் ஒருவர் இதற்கு உடந்தை யாக இருக்கிறார்” என்று கூறி யிருந்தார். இப்புகார் தொடர்பாக, மோசடி, மனைவியின் சொத்து களை அபகரித்தல், குற்றச்சதி, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இம்ரான் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இம்ரானை அண்மையில் பெங் களூருவில் கைது செய்த போலீ ஸார், நேற்று டெல்லி நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தினர். அப் போது இம்ரான் திருடிச் சென்ற பொருட்களை மீட்பதற்காக அவரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிப்பதற்கு போலீஸார் அனு மதி கோரினர். இதற்கு இம்ரான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பங்கஜ் சர்மா, இம்ரானை நாளை (நவ.17) வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினர்.