பணம் டெபாசிட் செய்ய வரிசையில் நின்ற முதியவர் மாரடைப்பால் பலி: ஹைதராபாத்தில் துயரச் சம்பவம்

பணம் டெபாசிட் செய்ய வரிசையில் நின்ற முதியவர் மாரடைப்பால் பலி: ஹைதராபாத்தில் துயரச் சம்பவம்
Updated on
1 min read

ரூ.500, 1000 நடவடிக்கை விளைவாக ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய வங்கிக்கு வந்த 78 வயது முதியவர் ஒருவர் ஹைதராபாத்தில் வங்கி வாசலில் மாரடைப்பால் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியது.

லஷ்மண் ராவ் என்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர், மாரெட்பள்ளி வங்கிக் கிளைக்கு ரூ.1.5 லட்சம் பணத்துடன் டெபாசிட் செய்ய வந்து வரிசையில் காத்திருந்தார். அப்போது வங்கி நுழைவாயிலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டும் மயங்கி விழுந்தார். பணியில் இருந்த போலீஸ்காரர்கள் அவரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவருக்கு இருதய நோய் இருந்தது என்றும் அதற்காக அறுவைசிகிச்சையும் முன்னர் செய்து கொண்டார் என்பதும் தெரியவந்துள்ளது.

முதியவர் அரைமணிநேரம் வரிசையில் காத்திருந்ததாக பணியில் இருந்த மற்றொரு காவலர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in