Published : 19 Sep 2022 06:22 AM
Last Updated : 19 Sep 2022 06:22 AM

லுஃப்தான்சா விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டாரா பஞ்சாப் முதல்வர்?

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்.

பிராங்ஃபர்ட்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடந்த 11-ம் தேதி ஜெர்மனிக்கு சென்றார். பஞ்சாபில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முனீச், பிராங்ஃபர்ட், பெர்லின் ஆகிய நகரங்களில் அவர் தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். அங்கு நடந்த டிரிங்டெக் 2022 வர்த்தக கண்காட்சியிலும் அவர் பங்கேற்றார். அவருடன் அவரது மனைவி மற்றும் மூத்த அதிகாரிகள் சென்றிருந்தனர்.

லுஃப்தான்ஸா விமானத்தில் பிராங்ஃபர்ட் நகரிலிருந்து நேற்று டெல்லி திரும்ப அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் அந்த விமானத்தில் வரவில்லை. விமானம் சுமார் 4 மணி நேரம் தாமதமாக வந்தது. இதனிடையே, பகவந்த் மான் தடுமாற்றத்துடன் இருந்ததால் அவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாகவும். இதனால் விமானம் புறப்பட தாமதமானதாகவும் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் ஊடக தகவல் இயக்குனர் சந்தர் சுதா டோக்ராவிடம் கேட்டபோது, ‘‘பஞ்சாப் முதல்வருக்கு உடல்நிலை சற்று சரியில்லை. இதனால் அவர் இன்று நாடு திரும்புவார் என தகவல் தெரிவித்தார். நேற்று டெல்லியில் நடந்த அனைத்து கட்சி எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் அவர் காணொலி மூலம் உரையாற்றினார் எனவும் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x