பட்ஜெட் எதிரொலி: விலை உயர்பவையும், விலை குறைபவையும்

பட்ஜெட் எதிரொலி: விலை உயர்பவையும், விலை குறைபவையும்
Updated on
1 min read

மத்திய பட்ஜெட் 2014-ன் எதிரொலி காரணமாக, சிகரெட் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கிறது. செல்பேசி, கம்ப்யூட்டர் விலை குறைகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார். இதில், வரிவிதிப்பில் செய்த மாற்றங்களின் காரணமாக விலை உயரும், குறையும் பொருட்களின் விவரம்:

விலை உயர்பவை:

* சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள், குட்கா, பான் மசாலாக்கள்

* குளிர்பானம்

* இறக்குமதி செய்யப்பட்ட இரும்புப் பொருட்கள்

* எவர்சில்வர் பொருட்கள்.

* தொலைக்காட்சி, ஆன்லைன் விளம்பரக் கட்டணம்.

* உடைந்த வைரம்

* இறக்குமதி செய்யப்படும் உயர் தொழில்நுட்ப சாதனங்கள்

* போர்டபிள் எக்ஸ்-ரே இயந்திரங்கள்

விலை குறைபவை:

* மொபைல் போன்கள்.

* கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள்

* 19 இன்ச்களுக்கு குறைவான எல்.இ.டி. எல்.சி.டி. டிவி-க்கள்

* காலணிகள் விலை

* சோப்பு

* தீப்பெட்டிகள்

* லைப் மைக்ரோ இன்சூரன்ஸ் பாலிசிகள்

* பிளாஸ்டிக் பொருள்கள்

* ஆடம்பர கற்கள்

* அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள்

* அச்சு விளம்பரங்களுக்கான கட்டணம்

* மின் புத்தகங்கள்

* ஆர்.ஓ. நீர் சுத்திகரிப்பு யூனிட்டுகள்

* எல்.இ.டி. விளக்குகள், எல்.இ.டி. விளக்கு பொருத்தும் பட்டிகள்

* ஸ்போர்ட்ஸ் உறைகள்

* பிராண்டட் பெட்ரோல்

* எச்.ஐ.வி / எய்ட்ஸ் மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள்

* டி.டி.டி பூச்சிக்கொல்லி மருந்துகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in