வங்கிகளில் ரூ.2,000 மட்டுமே மாற்ற முடியும்: புதிய கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமல்

வங்கிகளில் ரூ.2,000 மட்டுமே மாற்ற முடியும்: புதிய கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமல்
Updated on
2 min read

விவசாயிகள், வணிகர்கள், திருமண வீட்டாருக்கு சலுகைகள்

*

காலாவதியான 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக வங்கிகளில் இனிமேல் ரூ.2,000 மட்டுமே மாற்றிக் கொடுக்கப்படும். ஒருமுறை பணத்தை மாற்றிக் கொண்டவர்கள் டிசம்பர் 30 வரை மீண்டும் பழைய நோட்டுகளை மாற்ற முடியாது. இந்த புதிய கட்டுப் பாடு இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

எனினும் திருமண வீட்டார் ரூ.2.5 லட்சமும் வணிகர்கள் வாரத்துக்கு ரூ.50,000-ம் விவசாயிகள் வாரத்துக்கு ரூ.25,000-ம் வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ம் தேதி இரவு அறிவித்தார். அந்த நோட்டுகளுக்கு பதிலாக வங்கிகளில் ரூ.4,000 மாற்றிக் கொடுக்கப்பட்டது. பின்னர் அந்தத் தொகை ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் வங்கி களில் இனிமேல் ரூ.2,000 மட்டுமே மாற்றிக் கொடுக் கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும் திருமண வீட்டார், விவசாயி களுக்கு சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் டெல்லியில் நேற்று கூறியதாவது:

காலாவதியான 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகள், அஞ்சலகங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகளும் திருமண வீட்டாரும் அதிகம் பாதிக்கப்படுவதாக பிரதம ருக்கும் நிதி அமைச்சருக்கும் ஏராளமான புகார்கள் வந்தன. எனவே விவசாயிகள், திருமண வீட்டார் பணம் எடுப்பதில் கட்டுப்பாடு தளர்த்தப்பட் டுள்ளது.

திருமண வீட்டார் தங்களின் செலவுக் காக வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 2.50 லட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம். இதன்படி தந்தை அல்லது தாயார் அல்லது மகன் அல்லது மகள் ஆகியோரின் வங்கிக் கணக்கில் இருந்து இந்தத் தொகையை எடுக்கலாம். இதற்காக திருமண பத்திரிகை, சொந்த உறுதிமொழி கடிதம், பான் அட்டை விவரங்களை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

பயிர்க் கடன் பெற்ற விவசாயிகள், வேளாண் கடன் அட்டை வைத்திருப் பவர்கள் ஒரு வாரத்துக்கு ரூ.25,000 வரை பணம் எடுக்கலாம். காசோலை மூலம் கிடைத்த டெபாசிட்டுகள் மற்றும் வங்கி மின்னணு பரிமாற்றம் மூலம் கணக்கில் சேர்ந்த தொகையை வாரந்தோறும் ரூ.25,000 என்ற அளவில் கூடுதலாக எடுக்கலாம்.

இதன்படி ஒவ்வொரு வாரமும் விவசாயிகள் ரூ. 50 ஆயிரத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுக்க முடியும். பயிர்க் காப்பீட்டுக்கான பிரிமியம் செலுத்துவதற்கான காலஅவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.

பதிவு செய்யப்பட்ட வணிகர்கள் தங்களின் வங்கிக் கணக்கில் இருந்து வாரத்துக்கு ரூ.50,000 வரை எடுத்துக் கொள்ளலாம். மத்திய அரசின் குரூப் சி பிரிவு ஊழியர்கள் சம்பள முன்பணமாக ரூ.10,000 பெற்றுக் கொள்ளலாம். இந்தத் தொகை அவர்களின் நவம்பர் மாத ஊதியத்தில் சமன் செய்யப்படும்.

வங்கிகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டு களுக்கு பதிலாக இனிமேல் ரூ.2,000 மட்டுமே மாற்றிக் கொடுக்கப்படும். இந்த நடைமுறை வெள்ளிக் கிழமை முதல் அமலுக்கு வருகிறது. ஒருமுறை பணத்தை மாற்றியவர்கள் டிசம்பர் 30 வரை மீண்டும் பழைய ரூபாய் நோட்டு களை மாற்ற முடியாது. வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

பணத்தை மாற்றியவர்களே மீண்டும் மீண்டும் வங்கிகளுக்கு செல்வதால் மற்றவர்கள் வெறும் கையோடு திரும்பிச் செல்லும் நிலை காணப்படு கிறது. இதை தடுக்கவே பணத்தை மாற்று வோரின் வலது கை விரலில் மையிடும் நடைமுறை பின்பற்றப் படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in