

அகமதாபாத்தில் 13 வயது சிறுவன் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியங்களில் ஒருவர் கூறும்போது, 'கார் தன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் மீது மோதியது.
இதில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்தவுடன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சிறுவனை மக்கள் துரத்திப் பிடித்தனர்' என்றார்.
அந்தச் சிறுவன் வேகமாக கார் ஓட்டுவது குறித்து அருகில் உள்ள மக்கள், அவரின் பெற்றோருக்கு ஏற்கெனவே சில முறை எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.