

கறுப்புப் பணத்தை மாற்றித் தருவ தாக கூறி ஒரு தொழிலதிபரிட மிருந்து ரூ.50 லட்சத்தை பெற்றுக் கொண்டு தலைமறைவான கும்பலை போலீஸார் நேற்று கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் இதை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். எனினும், ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்பவர்களை வருமான வரித் துறையினர் கண்காணிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஹைதராபாத் ராஜேந்திர நகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், தன்னிடமிருந்த ரூ.50 லட்சம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற நினைத்தார்.
இதை அறிந்த ஒரு கும்பல், தொழிலதிபரைத் தொடர்பு கொண்டு 10 சதவீதம் கமிஷன் வழங்கினால் ரூ.50 லட்சத்தை வங்கியில் மாற்றிக் கொடுப்பதாகக் கூறி உள்ளனர். இதை நம்பி நேற்று முன்தினம் ரூ.50 லட்சத்தை கொடுக்க வந்த தொழிலதிபர் கமிஷன் தொகையை குறைக்க வேண்டுமென வலியுறுத்தியதாக தெரிகிறது.
இதையடுத்து அவரிட மிருந்த பணத்தை வலுக்கட்டாய மாக பிடுங்கிக் கொண்டு அந்த மர்ம கும்பல் தப்பி ஓடி விட்டது.
இதைப் பார்த்த பொதுமக்கள், இதுகுறித்து ராஜேந்திர நகர் போலீஸாருக்கு தகவல் கொடுத்த னர். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இதில் தொடர் புடைய ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேரை போலீஸார் நேற்று ஹைதராபாத் தில் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.37.5 லட்சத்தை கைப்பற்றினர். இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.