மும்பை சோகம் | பள்ளியில் லிஃப்ட் கதவில் சிக்கி ஆசிரியை உயிரிழப்பு

மும்பை சோகம் | பள்ளியில் லிஃப்ட் கதவில் சிக்கி ஆசிரியை உயிரிழப்பு
Updated on
1 min read

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் லிஃப்டில் செல்ல முயன்ற போது அதன் கதவில் சிக்கி பரிதாபமாக ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். அது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வடக்கு மும்பையில் உள்ள மலாடு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள சிஞ்சோலி பண்டர் எனும் இடத்தில் இயங்கி வரும் புனித மேரி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் 26 வயதான அந்த ஆசிரியரின் பெயர் ஜெனல் பெர்னாண்டஸ் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அவர் தான் லிஃப்ட் கதவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1 மணி அளவில் ஆறாவது மாடியில் இருந்து இரண்டாவது மாடியில் உள்ள ஆசிரியர்கள் அறைக்கு அவர் லிஃப்டில் வர முயன்றுள்ளார். அப்போது அவர் லிஃப்டுக்குள் நுழைய முயன்ற போது அதன் கதவுகள் தானாக மூடிக் கொண்டுள்ளன. அதோடு லிஃப்ட் மேல் நோக்கி நகர்ந்துள்ளது. லிஃப்டின் கதவுகளுக்கு இடையில் சிக்கிய அவரை அதிலிருந்து மீட்க பள்ளியின் ஊழியர்கள் சிரமப்பட்டு வெளியில் இழுத்து மீட்டுள்ளதாக தெரிகிறது. இருந்தாலும் அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் இந்த வழக்கை விபத்தாக பதிவு செய்துள்ளனர். அதோடு இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏதேனும் இந்த வழக்கில் மறைக்கப்பட்டிருந்தால் அதனை அடையாளம்கண்டு தக்க நடவடிக்கை எடுப்போம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in