

ஆந்திரா-ஒடிஷா மாநில எல்லை யில் மல்கங்கிரி மாவட்டம், ராம்கூர்கா வனப்பகுதியில் கடந்த மாதம் 30 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வியாழக்கிழமை ஆந்திரா, தெலங் கானா, ஒடிஷா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய 5 மாநிலங் களில் பந்த் நடத்துவதாக மாவோயிஸ்ட்கள் அறிவித்தனர்.
இதன் காரணமாக சம்பந்தப் பட்ட மாநிலங்களில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடு பட்டனர். இந்த மாநில எல்லை களில் செல்லும் பஸ்கள் பல இயக்கப்படவில்லை. நகர்ப்புறங் களில் உள்ள லாட்ஜ், சத்திரங் களில் சோதனைகள் மேற் கொள்ளப்பட்டன.
முதல்வர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் யாரும் வனப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் பட்டனர். ஆந்திராவில் கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்கள், விஜய நகரம், விசாகப்பட்டினம், காகுளம் ஆகிய மாவட்டங் களில் மாவோயிஸ்ட்களின் தாக்கம் அதிகம் உள்ளதால் இந்த மாவட்டங்களை போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர்.
இதேபோன்று, தெலங்கானா வில் கம்மம், வாரங்கல் ஆகிய மாவட்டகளில் தெலங்கானா போலீஸார் ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர். ஆந்திரா-ஒடிஷா மாநில எல்லையில் மல்கங்கிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் ஆந்திர போலீஸார் ஆய்வு செய்தனர்.