பெங்களூருவில் கடலைக்காய் திருவிழா தொடக்கம்: தமிழக விவசாயிகள் அதிகளவில் பங்கேற்பு

பெங்களூருவில் கடலைக்காய் திருவிழா தொடக்கம்: தமிழக விவசாயிகள் அதிகளவில் பங்கேற்பு
Updated on
1 min read

பெங்களூருவில் ஆண்டுதோறும் நடைபெறும் கடலைக்காய் திருவிழா நேற்று தொடங்கியது. இதில் கர்நாடகா மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயி களும், வியாபாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

பண்டைய பெங்களூரு நகரை சுற்றி பசவனகுடி, குட்டஹள்ளி, மாவள்ளி, தாசரஹள்ளி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் கடலைக்காய் பயிரிட்டுள்ளனர். கடலைக்காய் அறுவடைக்கு தயா ரான வேளையில் அப்பகுதியில் உள்ள கோயில் காளை மாடு (நந்தி) பயிர்களைத் தின்று தீர்த்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் நந்தியிடம், அறுவடை செய்யும் முதல் விளைச்சலை உனக்கே படை யலிடுவதாக வேண்டிக்கொண்ட னர். எனவே நந்தி பயிரை அழிப்பதை நிறுத்திக் கொண்டது.

இதை அனுசரிக்கும் விதமாக கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக அங்குள்ள நந்தி கோயிலில் கன்னட கார்த்திகை மாதத்தில் கடைசி திங்கள்கிழமை நந்தி சிலைக்கு கடலைக்காய் அபிஷேகம் செய்யப்படும். 3 நாட் கள் கோலாகலமாக நடைபெறும் இந்த திருவிழா நேற்று தொடங்கியது. சுமார் 30 விதமான கடலைக்காய்களைக் கொண்டு நந்தி சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த திருவிழாவில் பெங்களூரு, மைசூரு, துமகூரு, கோலார் உள்ளிட்ட மாவட்டங் களைச் சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் பங்கேற்றுள்ள‌னர். கர்நாடகா மட்டுமல்லாமல் தமிழ் நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங் களில் இருந்தும் ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் கலந்துகொண்டு உள்ள‌னர்.

தமிழகத்தில் இருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திரு வண்ணாமலை, திருக்கோயிலூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான கடலைக்காய் விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

பசவனகுடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த கடலைக்காய்களை மலைபோல சாலையின் இருபுற மும் கொட்டி விற்பனை செய்து வருகின்றனர். இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகளும், பார்வை யாளர்களும் ஆர்முடன் வாங்கிச் சென்றனர். கடலைக்காய் திரு விழாவை முன்னிட்டு பச்சை, வறுத்த, அவித்த கடலைக்காய் மற்றும் கடலைக்காயில் செய்யப் பட்ட இனிப்பு மற்றும் கார தின் பண்டங்கள் விற்பனை செய்யப் பட்டன. நாளை (புதன்கிழமை) வரை நடைபெறும் இவ்விழாவில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in