

சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப் பட்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இவருக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்க பலர் முன் வந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், நரசராவ் பேட்டையின் எம்.பி.யான (தெலுங்கு தேசம்) ராயபாட்டி சாம்பசிவ ராவ், தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன் வந்துள்ளார். இதுகுறித்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேற்று எழுதி உள்ள கடிதத்தில், “மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் சேவை இந்த நாட்டுக்கு மிகவும் தேவை. இதனால் அவர் சம்மதிக்கும் பட்சத்தில், எனது ஒரு சிறுநீரகத்தை தானமாக தர தயாராக இருக்கிறேன்” என கூறி உள்ளார்.