அதிக பொறியியல் கல்லூரிகள் உருவாக்க அரசு நடவடிக்கை - பிரதமர் நரேந்திர மோடி தகவல்

அதிக பொறியியல் கல்லூரிகள் உருவாக்க அரசு நடவடிக்கை - பிரதமர் நரேந்திர மோடி தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு, அனைத்து பொறியாளர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

நமது நாட்டில் திறமையான பொறியாளர்கள் பலர் உள்ளனர். நாட்டை கட்டமைப்பதில் அவர்தங்கள் பங்களிப்பை அளிக்கின்றனர். பொறியியல் கல்லூரிகள் உட்பட பொறியில் படிப்புக்கான கட்டமைப்புகளை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. பொறியாளர்கள் தினத்தில் சர் விஸ்வேஸ்வரய்யாவின் அளப்பரிய பங்களிப்பை நாடுநினைவு கூர்கிறது. வருங்கால பொறியாளர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள அவரது பங்களிப்பு தொடர்ந்து ஊக்கமளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இரங்கல்

மலேசியாவின் முன்னாள் கேபினட் அமைச்சர் துன் டாக்டர் சாமி வேலுவின் மறைவுக்கும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் விடுத்துள்ள இரங்கலில், ‘‘மலேசியாவின் முன்னாள் கேபினட் அமைச்சரும், வெளிநாடு வாழ் இந்தியசம்மான் விருதை மலேசியாவில் இருந்து பெற்ற முதல் நபரானடாக்டர் சாமி வேலுவின் மறைவுவால் மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’’ என குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in