

தெலுங்கு தேசம் கட்சியில் 54 லட்சம் தொண்டர்கள் இருப்பதாக அக்கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு பெருமிதம் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதியில் உள்ள தனது வீட்டில் சந்திரபாபு நாயுடு நேற்று தெலுங்கு தேசம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக்கொண் டார். பின்னர் அப்பகுயில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஜனநாயகத்தில் கட்சித் தொண்டர்கள் மிக முக்கியமானவர் களாக கருதப்படுகின்றனர். இதனால்தான் தெலுங்கு தேசம் கட்சியில் தொண்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சியில் 54 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை நான் எனது பெரிய குடும்பமாக கருதுகிறேன். ஏழ்மை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதே எனது லட்சியம்.
நான் இரவு பகலாக கட்சிக் காகவும், மாநில வளர்ச்சிக்காவும் உழைத்து வருகிறேன். இதில் நான் சோர்வடைந்தது இல்லை. அரசியலை நம்பி எனது குடும்பம் இருக்கக் கூடாது என்பதற்காக 25 ஆண்டுகளுக்கு முன்பே நான் குடும்பத்துக்கென தனியாக தொழில் தொடங்கினேன். தற் போது அதனை நம்பியே எனது குடும்பம் உள்ளது. எனது நிறு வனத்திற்காக அரசுத் தரப்பில் இதுவரை எந்த உதவியும் பெற வில்லை. மாநிலத்தில் பெண்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். ரவுடிகள் தொல்லை இருக்கக் கூடாது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
அமராவதி பகுதியின் உண்ட வல்லி ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணாவிடமிருந்து கட்சியின் உறுப்பினர் அட்டையை சந்திரபாபு நாயுடு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்களும் உறுப்பினர் அடையாள அட் டையைப் பெற்றுக்கொண்டனர்.