ரூபாய் நோட்டு பிரச்சினை: டெபாசிட் செய்ய முடியாமல் சத்தீஸ்கர் பழங்குடி மக்கள் பாதிப்பு

ரூபாய் நோட்டு பிரச்சினை: டெபாசிட் செய்ய முடியாமல் சத்தீஸ்கர் பழங்குடி மக்கள்  பாதிப்பு
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்டார் மாவட்டத்திலுள்ள பழங்குடி மக்கள் ரூபாய் நோட்டு செல்லாத நடவடிக்கையால் புதியதொரு பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.

கொல்கத்தாவில் Women Against Sexual Violence and State Repression என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்க நிகழ்வில் ரூபாய் நோட்டு செல்லாது நடவடிக்கையால் பழங்குடி மக்கள் எந்த வகையில் பாதிப்படைகிறார்கள் என்பதை கோர்ஜோலி கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான சுனிதா பொட்டம் என்ற பெண் பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து சுனிதா பொட்டம்(19) 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) கூறியதாவது, "எங்களுடைய சேமிப்புப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யும்போது நாங்கள் மாவோயிஸ்ட்டுகளின் பணத்தை வைத்திருந்ததாக போலீஸாரால் சந்தேகிக்கப்படுகிறோம்.

விஜா குர்மே என்ற சிறுவன் வங்கிக்கு செல்லும்போது கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டான்.

முதலில் எங்களுக்கான பிரச்சினையை அரசு அறிய வேண்டும். எங்களுடைய கிராமத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது பீஜபூர் நகரம். ஒரு தேவைக்காக இரண்டு முதல் மூன்று நாட்கள்வரை வங்கியின் முன் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. எங்களுடைய அறுவடைக் காலங்களில் இது எப்படி சாத்தியமாகும்.

இதனால் பெரும்பாலான பழங்குடி மக்கள் வங்கிக்கு செல்வதையே தவிர்த்து வருகின்றனர். இதனால் பழங்குடி அல்லாத பிற வர்த்தகர்கள்தான் பயனடைகிறார்கள்" என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in