தபால் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டுகள் முறைகேடாக பரிவர்த்தனை: 2 தபால்காரர்கள் கைது

தபால் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டுகள் முறைகேடாக பரிவர்த்தனை: 2 தபால்காரர்கள் கைது
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்தில் கமிஷனுக்கு ஆசைப்பட்டு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை தபால் நிலையங்களில் முறைகேடாக மாற்றிய 2 தபால்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பு நீக்கம் செய்யப் பட்டதை தொடர்ந்து, அவற்றை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து புதிய நோட்டுகள் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட தபால் நிலையங்களில் இந்தப் பணப் பரிவர்த்தனையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சித்தார்த் ஜெயினுக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து சித்தூர் மாவட்டத்தின் மதனபல்லி வட்டாரத்துக்கு உட்பட சவுடேபல்லி, மதனபல்லி, புங்கனூர் ஆகிய தபால் நிலையங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கிராம மக்களுக்கே தெரி யாமல் அவர்களின் ஆதார் அட் டையின் நகல்கள் மூலம் தபால் நிலையங்களில் பல லட்சம் பழைய நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. இதன்பேரில் 2 தபால்காரர்களை சிபிஐ அதிகாரி கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு, இந்த முறைகேட்டின் பின்னணியில் இருந்தவர்கள் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in