வரிச் சலுகை உள்ள பழங்குடியினத்தவர் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயற்சி: 59 விமான நிலையங்களில் உஷார் நிலை

வரிச் சலுகை உள்ள பழங்குடியினத்தவர் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயற்சி: 59 விமான நிலையங்களில் உஷார் நிலை
Updated on
1 min read

நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். அதன்பின், கறுப்புப் பணத்தை மாற்ற பல வழிகளில் பலர் முயற்சித்து வருகின்றனர்.

பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.3.5 கோடி மதிப்புள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்தது சில நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை நாகாலாந்தில் உள்ள திமாபூர் விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்து விசாரித் தனர். அப்போது நாகாலாந்து முன்னாள் முதல்வர் நெய்பியூ ரியோவின் மருமகன் அனடோ ஜிமாமுக்கு இதில் தொடர்புள்ளது தெரிய வந்தது. இதையடுத்து அனடோவை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அனடோ பழங்குடி யினத்தவர் என்பதால் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள வரிச் சலுகை சான்றிதழை வருமான வரித்துறை யினரிடம் காட்டி உள்ளார். எனினும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங் களைச் சேர்ந்த பழங்குடியினத் தவரின் மேம்பாட்டுக்காக வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினத்தவர்கள் மூலம் கறுப்புப் பணத்தை வங்கிகளில் செலுத்தி வெள்ளையாக்கிக் கொள்ள முயற்சிக்கும் தகவல் அரசுக்கு கிடைத்துள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து கறுப்புப் பணத்தை வடகிழக்கு மாநிலங்களுக்கு விமானத்தில் கடத்துவதைத் தடுக்க மத்திய தொழிற்பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 59 விமான நிலையங்களில் சிஐஎஸ்எப் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in