

தனிச் செயலாளர்கள் நியமன விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 4 அமைச்சர்களின் பரிந்துரைகளை பிரதமர் அலுவலகம் நிராகரித்துவிட்டது.
உத்தரப் பிரதேசத்தின் 1995-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த அலோக் சிங் என்பவரை தனது தனிச் செயலராக நியமிக்க ஒப்புதல் அளிக்கும்படி பிரதமர் அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் அவரது கோரிக்கையை பிரதமர் அலுவலகம் நிராகரித்துவிட்டது. அலோக் சிங் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் தனிச் செயலாளராகப் பணியாற்றியவர் ஆவார்.
கடந்த ஆட்சியில் முக்கிய பதவி வகித்தவர்களுக்கு இந்த அரசில் முன்னுரிமை அளிக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
அதன்பேரிலேயே ராஜ்நாத் சிங்கின் பரிந்துரை நிராகரிக்கப் பட்டிருப்பதாக டெல்லி வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன.
இதேபோல் மேலும் 3 மத்திய அமைச்சர்கள் தேர்ந்தெடுத்த தனிச்செயலர்களையும் பிரதமர் அலுவலகம் நிராகரித்து விட்டது.