மஸ்கட்டில் ஏர் இந்தியா விமானத்தில் தீ: பயணிகள் தப்பினர்

மஸ்கட்டில் ஏர் இந்தியா விமானத்தில் தீ: பயணிகள் தப்பினர்
Updated on
1 min read

புதுடெல்லி: ஓமன் தலைநகர் மஸ்கட்டி லிருந்து கொச்சிக்கு புறப்பட விருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சில நிமிடங்களுக்கு முன்பாக இன்ஜினிலிருந்து புகை வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அதில் பயணம் செய்யவிருந்த 145 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மீட்பு பணிகளை விரைவாக மேற்கொண்டதால் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மாற்று விமானத்தில் பயணிகளை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. இத்தகவல் சிவில் விமானப் போக்குவரத்து துறை பொது இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறு வனத்தைடாடா குழுமம் அண்மையில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in