

குஜராத்தின் சூரத் மற்றும் மும்பையில் ஸ்ரீராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவ னத்தை நடத்தி வருபவர் சாவ்ஜி தோலாக்கியா. இவர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, வீடுகள், கார்கள் என தீபாவளி போனஸாக வாரி வழங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் சிறந்த ஊழியர் கள் 300 பேரை தேர்ந்தெடுத்து அவர்களது குடும்பத்துடன் உத்தராகண்ட் மாநிலத்துக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார். இதற்காக தனது அலுவலகத் துக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ள அவர், ஊழியர் கள் சிரமம் இல்லாமல் சுற்றுலா மேற்கொள்ள வசதியாக ரூ.90 லட்சம் செலவில் தனி ‘ஏசி’ ரயிலை யும் முன்பதிவு செய்துள் ளார்.
இது குறித்து தனது பெயரை வெளியிட விரும்பாத தோலாக் கியா நிறுவன ஊழியர் ஒருவர் கூறும்போது, ‘‘ஆண்டுதோறும் ஊழியர்களுக்காக அவர் இன்பச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்வார். சொந்த குடும்பத்தினரை போல எங்களை அவர் நடத்துவார். அவரும் எங்களுடன் இன்பச் சுற்றுலா வருவார்’’ என்றார். இந்தச் சுற்றுலாவின் போது சில சமூகப் பணிகளையும் மேற் கொள்ள தோலாக்கியா முடிவு செய்தார். அதன்படி ரிஷி கேஷில் உள்ள சுவர்காஷ்ரம் பகுதியை உள்ளூர் மக்கள் உ தவியுடன் கடந்த வியாழக்கிழமை தூய்மைப்படுத்தினார். இது குறித்து மற்றொரு ஊழியர் ஒருவர் கூறும் போது, ‘‘தனது நற்செயல்களை பிரபலப்படுத்தி விளம்பரம் தேடிக் கொள்வது தோலாக்கியாவுக்கு பிடிக்காது’’ என்றார்.
300 ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் என 1,200 பேர் சுற்றுலாவில் பங்கேற்றுள்ளனர்.