

முன்னணி இந்தி செய்தி தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு ஒரு நாள் தடை விதிக்கப்பட உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் தீவிரவாத தாக்கு தல் தொடர்பான செய்திகளை ஒளிபரப்பிய போது, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ விவரங்களையும், ரகசியம் காக்கப்பட வேண்டிய முக்கிய தகவல்களையும் பகிரங்கமாக வெளிச்சம் போட்டுக்காட்டியதாக ‘என்டிடிவி இந்தியா’ சேனல் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதனை உறுதி செய்த மத்திய அமைச்சர்கள் குழு, வரும் 9-ம் தேதி அன்று, அந்த தொலைக்காட்சிச் சேனலில் நிகழ்ச்சிகள் எதையும் ஒளிபரப்பாமல் நிறுத்திவைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
இப்பரிந்துரையை ஏற்று, மத்திய தகவல் மற்றும் ஒலி பரப்பு அமைச்சகம் தொலைக் காட்சி நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக் கின்றன.
தீவிரவாத தாக்குதல் தொடர் பான நிகழ்ச்சி ஒளிபரப்புக்காக, தொலைக்காட்சி சேனலுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை.
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு களால்தான் உயிரிழப்பு அதிகரித்த தாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.