

இந்திய ஒற்றுமை பயணத்தின்போது தமிழகத்தின் மார்த்தாண்டத்தில் ராகுல் காந்தியை சந்தித்த பெண்கள் அவருக்கு தமிழ்நாட்டிலேயே பெண் பார்த்து திருமணம் முடித்துவைப்பதாகக் கூறிய சம்பவத்தை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார் ஜெய்ராம் ரமேஷ். ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் 4 நாட்கள் தமிழகப் பயணம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் மார்த்தாண்டத்தில் அவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண்களை சந்தித்தார். அப்போது, அந்தப் பெண்கள் ராகுல் காந்தியிடம் உங்களுக்கு தமிழ்நாடு ரொம்பப் பிடித்திருக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் பெண் பார்த்து தருகிறோம் என்றனர். அந்த நிகழ்வில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்ட ஜெய்ராம் ரமேஷ் ராகுல் காந்தி அந்தப் பெண்கள் கூறியதை சுட்டிக்காட்டி சிரித்து மகிழ்ந்தார். அவர் புகைப்படமே அதற்குச் சான்று என்று பதிவிட்டுள்ளார்.