

டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக வர்தமான் கவுசிக் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைவர் நீதிபதி சுதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை 18-ம் தேதி, டெல்லி மற்றும் தேசிய தலை நகர் பிராந்தியத்தில் 10 ஆண்டு களுக்கு முன் பதிவு செய்யப்பட்ட அனைத்து டீசல் வாகனங்களின் அனுமதியையும் ரத்து செய்ய உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கு நேற்று தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைவர் நீதிபதி சுதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததது. அப்போது நீதிபதிகள் ஹரியாணா, டெல்லி, ராஜஸ் தான், உத்தரப்பிரதேச மாநில அதிகாரிகளைப் பார்த்து,
“உங்கள் பகுதியில் இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைப்ப தற்கு இதுவரை என்ன செய்துள்ளீர்கள்? உங்களின் பதிலை தாக்கல் செய்யும்படி கேட்டிருந்தோம். செய்துவிட்டீர் களா. டெல்லியில் 50 சதவீத காற்று மாசுபாட்டுக்கு அதன் அண்டை மாநிலங்கள்தான் காரணம். டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாகி வருகிறது. உங்கள் மாநிலங்களில் சிஎன்ஜி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு சிஎன்ஜி மையங்களை அறிமுகம் செய்யாவிட்டால், உங்கள் மாநில அரசுப் போக்கு வரத்தை நிறுத்தி விடுவோம்” என எச்சரிக்கை விடுத்தனர்.
அடுத்த கட்ட விசாரணை 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. அப்போது, 4 மாநில உயரதிகாரிகள், பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு வாரிய அதிகாரிகள் ஆகியோர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.