

மும்பை புறநகர் பாந்த்ராவில் 5 அடுக்கு கட்டிடம் இடிந்து விழுந்து 4 சிறுவர்கள் பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகரான பாந்த்ரா கிழக்கில் பெஹ்ரம்படா குடிசைப் பகுதியில் நேஷனல் ஸ்கூல் அருகே அமைந்திருந்த 5 அடுக்கு கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. உடனடியாக தீயணைப்பு படை யினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், 2 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள் பலியானதாக, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
மேலும், 5 பேர் படுகாயங் களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மிகவும் நெரிசலான குறுகிய இடத்தில் விதிகளை மீறி அதிக உயரத்தில் கூடுதல் அடுக்குமாடிகளை இப் பகுதியில் பலர் கட்டியுள்ளனர். விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சி அண்மையில் உத்தர விட்டது குறிப்பிடத்தக்கது.